அனைத்து சாதியினர் அர்ச்சகர் கதையா? 'என்னங்க சார் உங்க சட்டம்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் திமுக அரசு பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றியது என்பதும் அந்த சட்டத்தின் படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற திரைப்படம் என தெரிகிறது. சற்றுமுன் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சரியான நேரத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு மெல்லிய காதல் மற்றும் காமெடியும் உள்ளது என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிரது.
ஆர்எஸ் கார்த்திக், ஆர்யா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், ரோகினி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவில், குணா பாலசுப்பிரமணியன் இசையில், பிரகாஷ் கருணாநிதி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments