ஏமன் விமான நிலையத்தில் தாக்குதல்… பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தபோது பயங்கரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏமன் நாட்டின் விமான நிலையம் ஒன்றில் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அங்கு தரை இறங்கிய விமானத்தில் அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திட்டமிடப்பட்டே இத்தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டு இருக்கிறது.
ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இதுவரை 26 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இதுவரை உலகின் எந்த அமைப்புகளுக்கு பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்தாக்குதலில் ஹத்தி ஏவுகணைகள் வெடித்தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இருந்த விமானம் தரை இறங்கிய சிறிது நேரத்தில்தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் முக்கிய உயர் அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்புகளை தற்போது அந்நாட்டு இராணுவம் வழங்கி வருகிறது.
ஏடன் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானத்திற்குள் அந்நட்டின் பிரதமர் மயீன் அப்துல் மாலிக் மற்றும் ஏமனுக்கான சவுதி தூதர் மொகமத் சயீத் அல் ஜாபர் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்ததாகவும் குண்டுவெடிப்பு நடைபெற்றபோது அவர்கள் மீண்டும் விமானத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த விமானத்தில் முழுவதும் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
?? BREAKING: Massive blast at #Aden Airport in #Yemen, reportedly caused by mortar attack, soon after arrival of new government ministers to the site.
— Mete Sohtaoğlu (@metesohtaoglu) December 30, 2020
?? pic.twitter.com/BZpDUgWehd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout