எடியூரப்பா-விராத் கோஹ்லி: பெங்களூரின் தலையெழுத்து இந்த 2 பேர்களின் கையில்?
- IndiaGlitz, [Saturday,May 19 2018]
சமீபத்தில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூராப்பா, இன்று மாலைக்குள் தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் ஆட்சியை தொடர முடியும்.
அதேபோல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூர் அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. தற்போது 6 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்று 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
எனவே பெங்களூரை தலைநகராக கொண்ட கர்நாடக மாநில ஆட்சி தப்பிப்பதும், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு செல்வதும், எடியூரப்பா, விராத் கோஹ்லியின் கையில்தான் உள்ளது. இருவருக்கும் இன்று வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்