வரதட்சணை புகாரில் சிக்கிய 'யட்சன்' நடிகரின் உருக்கமான கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அலிபாபா, கழுகு, மற்றும் சமீபத்தில் வெளியான 'யட்சன்' போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா, தனது மனைவி ஹேமலதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாகவும், இந்த வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கிருஷ்ணா மீது அவரது மனைவி ஹேமலதா கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் கிருஷ்ணா மீதும் அவரது பெற்றோர் மீதும், வரதட்சணை ஒழிப்பு மற்றும் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கிருஷ்ணா பத்திரிகையாளர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு, நான் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை எனக்கு அளவில்லா ஆதரவையும் அன்பையும் அளித்தவர்கள் நீங்கள். சற்றும் எதிர்பாராவிதமாக என்மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தின் படி இருவருக்குமிடையே சமரச பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட வீதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இவ்வழக்கினை உறிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். இது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் ஊடகத்திலுள்ள என் நண்பர்களும் மற்றவர்களும் என் அந்தரங்கத்தை மதித்து எனக்கு உதவு வேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஏனென்றால் இது என்னை நேசிக்கும் பலரை பாதிக்கிறது. தொடரும் உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி.
இவ்வாறு கிருஷ்ணா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com