விபத்திற்கு முன் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டாரா யாஷிகா?
- IndiaGlitz, [Sunday,January 02 2022]
நடிகை யாஷிகா ஆனந்த் ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அவர் கிட்ட தட்ட கடைசி வரை தாக்குபிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் தற்போது தான் அவர் இயல்பு நிலை திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அந்த வாய்ப்பை தான் இழந்ததாகவும் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இருப்பினும் தற்போது யாஷிகா ஆனந்த் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டதால் பிக்பாஸ் இந்தி அடுத்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.