மறைந்த தோழி பவானியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை யாஷிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார் விபத்தில் இறந்த மறைந்த தோழி பவானியின் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகை யாஷிகா சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது தோழியின் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டதை அறிந்து யாஷிகா உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் பவானி தன்னை எப்போதும் மன்னிக்க மாட்டார் என்றும் அவருடைய குடும்பத்திற்கு தான் நீங்காத ஒரு துன்பத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது யாஷிகா தனது தோழி பவானியுடன் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவரும் புன்னகையுடன் இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போது அனைவருக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் யாஷிகா முழு குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகும் என்று அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#yashikaanand 's heartbreaking video ???? pic.twitter.com/YTJXBl7MOx
— JD (@mastervijay2020) August 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com