ரிச்சர்டை காதலிப்பது உண்மையா? யாஷிகா அம்மா விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது யாஷிகாவின் அம்மா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர், படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தான் இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர், அதை வைத்து இருவருக்கும் காதல் என்று எழுதி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

’இந்த செய்தியில் உண்மை இல்லை, இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் போது அனைவருக்கும் உண்மை தெரியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரிச்சர்ட் மற்றும் யாஷிகா இருவரும் காதலிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.