நீச்சல் குளத்தில் யாஷிகா: விபத்துக்கு பின் வெளியான ஜாலியான வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சமீபத்தில் விபத்தில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவருடைய உயிர் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் யாஷிகாவிற்கு முதுகெலும்பு உள்பட பல பகுதிகளில் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எடுத்துக்கொண்ட சிகிச்சைக்கு பின் யாஷிகா படிப்படியாக உடல்நலம் தேறி வருகிறார். தனது சிகிச்சை மற்றும் குணமாகி வருவது குறித்து அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யாஷிகா தற்போது நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவரது தங்கை மற்றும் நாய் குட்டியுடன் சந்தோசமாக இருக்கும் காட்சிகளும் உள்ளன. இதனையடுத்து கிட்டத்தட்ட காயங்களிலிருந்து யாஷிகா குணம் ஆகி விட்டார் என்றே தெரிகிறது இதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.