காயத்தில் அடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்கள்: யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

யாஷிகாவின் காயத்தில் ஸ்டேப்ளர் அடிக்கப்பட்டு உள்ள வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது, அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது ஆண் நண்பர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் யாஷிகாவின் காயத்திற்கு ஏற்கனவே ஒருசில அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டதாகவும் மேலும் ஒரு சில அறுவை சிகிச்சைகள் செய்ய இருப்பதாகவும் அவர் பேட்டி அளித்து இருந்தார். 

இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள வீடியோவில் அவரது காயத்தில் ஸ்டேப்ளர்கள் போடப்பட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.