முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்! நெட்டிசன்கள் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்தவித படப்பிடிப்பும் இல்லாத காரணத்தினால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பொழுதை போக்கி வருகின்றனர்.

அந்த வகையில் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் புகழ் பெற்று, அதன்பின் பிக்பாஸ் போட்டிகளில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தனது சமூக வலைப்பக்கத்தில் தினந்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் இந்த மூன்று மாதங்களில் தன்னுடைய உடல் எடையை வொர்க் அவுட் செய்து வெகுவாக குறைந்துள்ளதாக ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் உள்ள உடல் எடை மற்றும் தற்போது உள்ள உடல் எடையை குறித்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இரண்டிலுமே முகம் மறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்துள்ள இந்த கவர்ச்சி போஸ்கள் அவரது உடல் எடை குறைப்பை சுட்டிக்காட்டினாலும் நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.