சிறையில் யாஷிகா! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

  • IndiaGlitz, [Tuesday,July 10 2018]

நேற்று பொன்னம்பலம் சிறைத்தண்டனை அனுபவித்து அதன் பின்னர் விடுதலையாகியுள்ள நிலையில் இன்று யாஷிகாவை பிக்பாஸ் சிறையில் தள்ளியுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, காயத்ரி மட்டுமே பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகினர். ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இன்னும் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக மகத், ஷாரிக், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் நால்வரில் யார் எவிக்சனுக்கு வந்தாலும் அவர்கள் விரப்படுவார்கள் என்பது உறுதி .

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் யாஷிகா சிறையில் உள்ளார். பொன்னம்பலம் சர்ச்சைக்குரிய வகையில் கூறியதாக அந்த ஒரு மேட்டரை வைத்தே மகத், யாஷிகா இன்றைய புரமோவில் பேசி வருகின்றனர். கடைசியில் யாஷிகா  சிறையில் இருப்பது போன்று அந்த புரமோ வீடியோ முடிகிறது. இன்று சிறையின் உள்ளே இருக்கும் யாஷிகா வரும் ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டின் வெளியே செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தமிழ்ப்படம் 2' ரன்னிங் டைம் குறித்த தகவல்

ஒரு திரைப்படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்பதை 'தமிழ்ப்படம் 2' படக்குழுவினர்களை பார்த்து மற்ற படங்களின் குழுவினர் கற்றுக்கொள்வது நல்லது.

ஜூலியின் காதலர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் தனது நெகட்டிவ் குணங்களால் டிரெண்டுக்கு ஆளான ஜூலி அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களின் படங்களில் ஆர்யா

கடந்த சில ஆண்டுகளாக ஆர்யா நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சமீபகாலமாக அவர் வெற்றிப்பட இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

ஆரம்பமானது 'அருவி' இயக்குனரின் அடுத்த படம்

'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் வெளியான இந்த படத்தை கமல், ரஜினி உள்பட் திரையுலக பிரமுகர்கள் அனைவரும் பாராட்டினர்.

விஜய்சேதுபதி, த்ரிஷா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி

முதன்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் '96' என்பது தெரிந்ததே. சிறுவயது முதல் முதிர்ச்சி அடைந்த பருவம் வரையிலான காதலை சொல்லும் இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கி வருகிறார்.