டிஸ்சார்ஜ் ஆகிட்டேன், ஆனா வீட்டுக்கு இன்னும் போகலை: யாஷிகா
- IndiaGlitz, [Saturday,August 07 2021]
நடிகை யாஷிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் அதில் அவரது உயிர்த்தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே. கார் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்று அவரிடம் தொலைபேசியில் பேட்டி எடுத்தது. அதில் ’நான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டேன். ஆனால் இன்னும் வீட்டுக்கு செல்லவில்லை. வீட்டுக்கு சென்றால் என்னுடைய உயிர்த்தோழி பவானியின் ஞாபகம் வரும் என்பதால் இப்போதைக்கு வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறினார். மேலும் தனக்கு தெரிந்த ந்ர்ஸ் ஒருவர் வீட்டில் தான் தற்போது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் தனக்கு இதுவரை மூன்று ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் செய்துள்ளதாகவும் வழி தற்போது வலி கொஞ்சம் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.