பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவின் ஆண் நண்பர்?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாவின் ஆண் நண்பர் நிரூப் நந்தகுமார் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் யாஷிகாவுக்கு கார் விபத்து நடந்தபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற நிரூப் நந்தகுமார், அதன் பின்னர் மருத்துவமனையில் யாஷிகாவின் தோழி பவானி விபத்தில் பலியான தகவலையும் முதன்முதலாக அறிந்து கொண்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிரூப் நந்தகுமார், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிளா, தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, ஆர்ஜே வினோத், குக் வித் கோமாளி சுனிதா, பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன், நடிகை ப்ரியா ராமன், திருநங்கை நமீதா, கோபிநாத் ரவி மலேசியாவை சேர்ந்த நதியா சங், பவானி ரெட்டி உள்பட ஒருசிலர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.