கருப்பு வெள்ளையில் யாஷிகாவின் உச்சகட்ட கிளாமர்:  அதிர்ந்த ரசிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 05 2022]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா இதுவரை இல்லாத அளவில் கருப்பு வெள்ளை போட்டோ ஷூட் கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துபோய் உள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரும், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருபவருமான யாஷிகா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் அவருக்கு அதில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா தனது உயிர்த்தோழியை பறிகொடுத்ததோடு படுகாயமடைந்து, அதன்பின் காயத்தில் இருந்து மீண்டு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். ஆனால் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளை போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இதுவரை இல்லாத அளவில் உச்சகட்ட கிளாமர் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாஷிகா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் இது ஒரு பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்று கூறியிருந்தார் என்பது தெரிந்ததே. திருமண அறிவிப்பை வெளியிட்ட யாஷிகா, கிளாமர் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.