ரசிகரின் கேள்விக்கு தனது முடியை பதிலாக சொன்ன யாஷிகா!
- IndiaGlitz, [Tuesday,March 08 2022]
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது முடியால் பதில் சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் நடித்து வந்தார் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாஷிகா திடீரென கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தற்போது தான் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த யாஷிகா, ஒரு ரசிகர் ’நீங்கள் இப்படி உடம்பை காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கின்றீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டிருந்தார்.
அந்த கேள்விக்கு பதில் சொன்ன யாஷிகா, என் முடியை காட்டி கூட பேசுவேன், ஏனென்றால் என் முடியும் கூட என் உடம்பில் ஒரு அங்கம்தான். என் முகத்தை உன்னிடம் காட்ட முடியவில்லை. அதனால் முடியை காட்டுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Yashika's savage reply to "body exposing" question ???????? pic.twitter.com/sJT0gSGT7B
— Anbu (@Mysteri13472103) March 7, 2022
Her inners ?? #yashikaanand pic.twitter.com/qPSjQlP0T8
— 000009 (@ui000009) March 7, 2022