'ஜாம்பி'யில் யோகிபாபுவுக்கு ஜோடியா யாஷிகா?

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

காமெடி நடிகர் யோகிபாபு, 'ஜாம்பி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருடன் கவர்ச்சி நடிகை யாஷிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. ஒருசில ஊடகங்களில் இந்த படத்தில் யோகிபாபுவும், யாஷிகாவும் ஜோடியாக நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து இயக்குனர் புவன்நல்லான் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபுவும், யாஷிகாவும் ஜோடி இல்லை என்றும், யோகிபாபுவின் தோழியாக யாஷிகா நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் ஒரு த்ரில் சம்பவங்களை கூறுவதால் இதில், லவ், டூயட், ரொமான்ஸ் இதற்கெல்லாம் இடமில்லை என்றும் தெரிவித்தார். மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பேய்ப்பங்களாவில் யோகிபாபுவின் மூன்று நண்பர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்றும், அவர்களை காப்பாற்ற சென்ற யோகிபாபுவும் மாட்டிக்கொள்ள, அவருடைய தோழி யாஷிகா அவர்களை காப்பாற்றுவதுதான் கதை என்றும் புவன்நல்லான் தெரிவித்தார்.

யோகிபாபு இந்த படத்தில் ஒரு காமெடி டான் ஆக நடித்துள்ளதாகவும், த்ரில், காமெடி கலந்து இந்த படத்தை இயக்கியுள்ளதாகவும் தெரிவித்த இயக்குனர் புவன்நல்லான், இந்த படத்தில் பிரேம்ஜி இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே என்றும், அந்த பாடலில் யோகிபாபுவும் யாஷிகாவும் சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளதாகவும் தெரிவித்தார்.