வேற லெவல் கிளாமர்: வைரலாகும் யாஷிகா ஆனந்த் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,July 12 2022]

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா வேற லெவல் கவர்ச்சி காஸ்டியூம் உடன் கூடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா அந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3.5 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்படும் கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா தனது உயிர் தோழியை பறி கொடுத்ததோடு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் யாஷிகா சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் உச்சகட்ட கிளாமர் காஸ்ட்யூமில் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமிபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட யாஷிகா திருமண அறிவிப்புக்கு பின்னரும் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.