ஒட்டகத்தை விட பெரிசா இருக்கீங்க: யாஷிகாவின் கிளாமர் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

பிரபல தமிழ் நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் கோவா சென்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த் அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கோவா சென்ற யாஷிகா ஆனந்த் அங்கிருந்து கொண்டே தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் நீங்கள் இந்த ஆங்கிலில் ஒட்டகத்தை விட பெரிதாக இருக்கிறீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளன. அதை அடுத்து அவர் பதிவு செய்த கிளாமர் புகைப்படம் ஒன்றில் ’நீங்கள் இல்லாமல் என்னால் எங்கும் செல்லமுடியாது’ என்று கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படத்திற்கும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

யாஷிகா தற்போது சல்பர், பாம்பாட்டம், கடமையை செய், ராஜபீமா. இவன் தான் உத்தமன் ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.