யாஷிகா ஆனந்த் அப்பாவுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்? ஆச்சரியமான புகைப்படங்கள் - வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

நடிகை யாஷிகா ஆனந்த் தனது அப்பா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் அஜித்தை போலவே இருப்பதாக கமெண்ட்கள் பதிவு செய்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் தனது அப்பாவின் பிறந்தநாள் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தனது அப்பா பிறந்தநாள் குறித்து அவர் கூறிய போது ’என் வாழ்க்கையில் மிகவும் சிறந்த நபர் என் அப்பாதான், பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர், எப்போதும் வசீகரமான தோற்றம் அவர் கண்களில் இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் கேட்கும் முன்னரே எங்களுக்காக அவர் செய்து கொடுப்பார். என்னுடைய அனைத்தையும் விமர்சனம் செய்யும் முதல் நபர் அவர்தான். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என் மனதில் நீங்காமல் இடம்பிடித்து இருக்கும் என்று எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

மேலும் தன் அப்பா பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ மற்றும் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள், யாஷிகாவின் அப்பா சுருட்டு பிடிப்பது , தலையில் கிளாசை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை புகைப்படத்தையும் பார்த்த ஏராளமான ரசிகர்கள், யாஷிகாவின் அப்பா அஜித் போலவே இருப்பதாக கூறியுள்ளனர். அஜித்தை போலவே அதே வெள்ளை தாடி, கருப்பு கண்ணாடி அணிந்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அஜித்துக்கும் யாஷிகா அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

கள்ளச்சாரயத்தினால் தாய் தந்தையை இழந்த சிறுமி.அரசு நடவடிக்கை எடுக்குமா?

இதில் மொத்தமாக 26 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரே நாளில் இத்தனை உயிரை பறித்த கள்ள சாராயத்தை தடை செய்யுமா இந்த அரசாங்கம்?...

செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திய பாடகி.

தன் குரலால் பலரின் மனதை வருடிய இவர் தற்போது அரிய செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

ரொம்ப கேவலமா ட்ரீட் பண்ணாங்க.. 'மகாராஜா' அனுபவம் குறித்து விஜய்சேதுபதி மகள் சஞ்சனா..!

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான 'மகாராஜா' நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா நமக்கு அளித்த

யோகிபாபு - வாணிபோஜன் நடிக்கும்  'சட்னி - சாம்பார்' சீரீஸ்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார்  ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

பேய் இருக்கா? இல்லை? - புதுக்கோட்டை நசீம் அம்மா ஆன்மீகக்ளிட்ஸில்

ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் குறித்த தகவல்களை வழங்கும் யூடியூப் சேனல் ஆன்மீகக்ளிட்ஸ், "பேய் இருக்கா? இல்லை?" என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.