ஹெலிகாப்டரில் இருந்து தில்லா டைவ் அடித்த பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முன்னதாக “கவலை வேண்டாம்” படத்தில் அறிமுகமான இவர் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். மேலும் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா தொடர்ந்து இளசுகளில் மத்தியில் கவனம் பெறும் ஒருவராகவே இருந்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரபு எமிரேட்ஸில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகின. தற்போது இவர் ஹெலிகாப்டரில் இருந்து தில்லா டைவ் அடிப்பது போன்ற ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவில் கொஞ்சமும் பயம் இல்லாமல் நடிகை யாஷிகா டைவ் அடித்த நிகழ்வு பலரையும் ஈர்த்து உள்ளது.

மேலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் “சல்பர்“ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தைத் தவிர “உத்தமன்”, “ராஜபீமா”, “கடமையைச் செய்”, “பாம்பாட்டம்” போன்ற படங்களிலும் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ஹெலிகாப்டரில் இருந்து டைவ் அடித்த வீடியோ இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.