பிக்பாஸ் 2: காக்ரோச் கதை சொல்லி பல்பு வாங்கிய யாஷிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஓவியாவின் பகுதிகளை அடிக்கடி பார்த்து மனப்பாடம் செய்து வந்திருப்பார்கள் போல் தெரிகிறது. ஓவியா போன்றே வீட்டுக்குள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் ஒரு ஓவியாதான் என்று ஓவியா ஆர்மியினர் கூறுவது உண்மை போல்தான் இவர்களுடைய நடிப்பு அவர்களுக்கே பல்பு வாங்கி கொடுக்கின்றது. சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் யாஷிகா ஆனந்த் கேமிராவை பார்த்து ஒரு காக்ரோச் கதை சொல்லி அவரே சிரித்து கொள்கிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த டேனி, கேமிராவை பார்த்து 'எத்தனை பேர் இருக்கிங்க, துப்பிடுங்க' என்று கூறியது யாஷிகாவிற்கு கிடைத்த பல்பாக கருதப்படுகிறது.
இன்னொரு பக்கத்தில் அனந்த், பொன்னம்பலத்திற்கு பாட்டு சொல்லி தருகிறார். அடுத்து பொன்னம்பலம், அனந்துக்கு சண்டை சொல்லி தருவாரோ? என்ற பயமும் ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் காமெடி அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரப்பான்பூச்சி செத்து போச்சி! ???? #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/V5NwRnFCJw
— Vijay Television (@vijaytelevision) June 18, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout