மீண்டு வரும் யாஷிகா: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும், அதன் பின் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் யாஷிகா சற்றுமுன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் காலில் இருக்கும் காயத்திற்கு கட்டு போட்டு இருப்பது போன்றும் அவர் அருகில் ஒரு நாய்க்குட்டி இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படத்தை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான புகைப்படத்தில் இருந்து இந்த புகைப்படத்தை பார்க்கும் போது யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்பது தெரிகிறது. யாஷிகா இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘எனது வலிமை’ என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.