'கேஜிஎப்' ராக்கி பாய்க்கு பிடிச்சது நெல்சன் படம் தானாம்!

விஜய் நடித்த ’பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்து பல்வேறு விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ’கேஜிஎப் 2’ திரைப்படத்தில் ராக்கி பாய் கேரக்டரில் நடித்த நடிகர் யாஷ்க்கு பிடித்த திரைப்படம் நெல்சன் படம்தான் என சமீபத்தில் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கார்த்தி உள்பட திரையுலக பிரமுகர்களும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் யாஷின் ’கேஜிஎப் 2’ படத்தை பாராட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த யாஷ், ‘நன்றி சகோதரரே! உங்களுடைய ‘டாக்டர்’ படம் பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அது ஒரு நல்ல படம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் நன்றி சகோதரரே! நீங்கள் ‘டாக்டர்’ படத்தை விரும்பி பார்த்ததில் மகிழ்ச்சி என்ற கூறியுள்ளார்.

யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படத்தை உலகமே கொண்டாடி வரும் நிலையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் தான் தனக்கு பிடித்த படம் என யாஷ் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.