'கேஜிஎஃப் 2' படக்குழு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப் 2’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’கேஜிஎஃப் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் விழாவை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
முதல்கட்டமாக ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’கேஜிஎஃப் 2’ படக்குழுவினரின் இந்த மாஸ் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
There is always a thunder before the storm ⚡#KGFChapter2 Trailer on March 27th at 6:40 pm.
— Hombale Group (@HombaleGroup) March 3, 2022
Stay Tuned: https://t.co/2Gymjd1uuJ@Thenameisyash @prashanth_neel@VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7
#KGF2TrailerOnMar27 pic.twitter.com/14hujHBKpg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com