உலக சாதனை செய்த நடிகர் யாஷ் ரசிகர்கள்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர் யாஷ் ரசிகர்கள் உலக சாதனை செய்ததை அடுத்து அவர்களுக்கு யாஷ் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .
பிரபல கன்னட நடிகர் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் நாளை உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் நாளை ’கேஜிஎப் 2’ ரிலீசாக உள்ளதை அடுத்து யாஷ் ரசிகர்கள் 25 ஆயிரத்து 650 சதுர அடியில் யாஷின் மாஸ் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். முதலில் 120×170 அடியில் உருவாக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதனை விரிவுபடுத்தி 135×190 அடியில் யாஷ் போஸ்டரை உருவாகியுள்ளதாகவும் இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ’எனது ரசிகர்கள் குடும்பம் மிகவும் வலிமையானது என்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றும் யாஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
My Fan(m)ily - My STRENGTH!
— Yash (@TheNameIsYash) April 13, 2022
Your Love and support is my power..
The world is ours! https://t.co/Om0eOXwwnm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments