கிருஷ்ணாவின் 'யாக்கை' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 06 2016]

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இரண்டாவது ஹீரோவாக நடித்த கிருஷ்ணா, தற்போது நாயகனாக விழித்திரு, யாக்கை, கிரஹனம், மற்றும் பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'யாக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி ரெட்டி மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் நடித்து வரும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சிங்கிள் டிராக் வரும் காதலர் தினத்திற்கு முந்தைய தினமான பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டிராக் வெளியாகும் அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்றும் சற்று முன்னர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை முத்துகுமாரன் என்பவர் தயாரித்து வருகிறார்.

More News

சென்னை மக்களுக்காக உண்டியல் ஏந்தும் தெலுங்கு நடிகர்கள்

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்...

விமல்-நந்திதாவின் 'அஞ்சல' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு விமல் நடித்த 'காவல்' என்ற ஒரே படம் மட்டுமே வெளியாகி சுமாராக ஓடிய நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'அஞ்சல'...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' இசையமைப்பாளர் அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் விசாரணை ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்...

'டார்லிங் 2' படக்குழுவினர்களுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சமீபத்தில் ரிலீஸான 'ரஜினிமுருகன்' படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை நட்சத்திர அந்தஸ்து உடைய நாயகனாக மாற்றிவிட்டது...

33 மணி நேரத்தில் 3 மில்லியன் 'தெறி' பார்வையாளர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியான...