யாஹூ சகாப்தம் முடிந்தது. 4.5 பில்லியனுக்கு வாங்கியது வெரிஜோன் நிறுவனம்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

கடந்த பத்து வருடங்களுக்கு முன் முன்னணி சியர்ச் இஞ்சின் இணையதளமாக இருந்த யாஹூ கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது யாஹூ நிறுவனத்தை வெரிஜோன் என்ற நிறுவனம் $4.5 பில்லியன் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் நம்பர் 1 வயர்லெஸ் ஆப்ரேட்டர் நிறுவனமான வெரிஜோன் நிறுவனம் யாஹூவையும் இணைத்து 'ஓத்' (Oath) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தில் யாஹூவின் 200 மில்லியன் பயனர்கள், ஏஓஎல் நிறுவனத்தின் 150 மில்லியன் பயனர்கள் மற்றும் 100 மில்லியன் வயர்லெஸ் சந்தாதார்கள் ஆகியவற்றை வைத்து டிஜிட்டல் விளம்பர உலகில் பெறும் புரட்சியை ஏற்படுத்த வெரிஜோன் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் யாஹூவை கைப்பற்றும் டீல் முடிந்துவிட்டதை அடுத்து யாஹூவின் சி.இ.ஓஆக இருந்த மரிசா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக ஓத் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக டிம் ஆம்ஸ்ட்ராங் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
மேலும் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 2000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், வெளியேற்றப்படும் ஊழியர்களில் அமெரிக்கர்களை தவிர மற்றவர்கள் அமெரிக்காவில் இருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More News

ரஜினியின் '2.0' முழு படத்தை பார்த்த முதல் இரண்டு விஐபிக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'.

போதை மருந்துக்கு அடிமையானவரா கிருத்திகா? தோழியின் திடுக்கிடும் தகவல்

பாலிவுட் நடிகை மற்றும் மாடலிங் கிருத்திகா நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார் என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம்

பாஜகவில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

நாட்டாமை, முத்து, துள்ளாத மனமும் துள்ளும், முகவரி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்

பயிற்சி வீடியோவுக்கு பதில் பாலியல் வீடியோ: விசாரணைக்கு உத்தரவிட்ட பி.எஸ்.எப்

எல்லை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எப் வீரர்களுக்கு அவ்வப்போது வீடியோ மூலம் பயிற்சி அளிப்பது வழக்கம்.

தினசரி பெட்ரோல்-டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?

நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது...