இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது யாஹூ: காரணம் இதுதான்!
- IndiaGlitz, [Thursday,August 26 2021]
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக இமெயில், செய்தி, கிரிக்கெட், பைனான்ஸ் என பல சேவைகளை செய்து வந்த யாஹூ நிறுவனம் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை அறிவித்தது என்பதும் இந்த கொள்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் குரல் கொடுத்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கொள்கைகள் தங்களுடைய நிறுவனத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது
இதனால் இன்று முதல் யாகூ கிரிக்கெட், என்டர்டெயின்மென்ட், பைனான்ஸ் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கை டிஜிட்டல் மீடியாக்களை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு, இந்தியாவின் புதிய கொள்கைகள் ஏற்றதாக இல்லை என்பதால் வெளியேறுவதாகவும் யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் யாஹூ மெயில் இந்தியாவில் தொடர்ந்து இயங்கும் என்றும், புதிய கொள்கைகள் யாஹூ மெயிலை கட்டுப்படுத்தாது என்றும், எனவே யாஹூ மெயில் பயனாளிகள் கவலைப்பட் தேவையில்லை என்று யாஹூ இந்தியா விளக்கம் அளித்துள்ளது