3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கையில் ஒரு பகுதியான 'யாழ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் "என்ன நடக்கின்றது என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் மூன்று கதைகளில் ஒரு வித்தியாசமான திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
போர் நடக்கும் சூழலில் தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றார்கள். அப்போது.. ஒரு கதையில் சிங்கள இராணுவ அதிகாரியான அசோகா (டேனியல் பாலாஜி) புலிகளின் ஒரு முக்கிய பெண் போராளி தலைவி தமிழ் செல்வியை தேடுகின்றான். தமிழ் செல்வி (நீலிமாராணி) யை பிடித்து வைத்து விடுகிறான். இது ஒரு கதை
மற்றொரு கதையில் வினோத் ஊரைவிட்டு போகும் தன் காதலி நிலா (லீமாபாபு) உடன் செல்ல முயற்சிக்கும் போது வழியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து அநாதையாக இருக்கும் குழந்தை அமுதினி (ரக்ஷனா) அவன் பயணத்தை இடை மறிக்கிறது.
மூன்றாவது கதையில் லண்டனில் இருந்து தன் சொந்த ஊருக்கு வரும் யாழினி (மிஷா) போருக்கு முன் தன் காதலனை சந்திக்க அலைகின்றாள்.
போரின் பின்னணியில் நடக்கும் இந்த மூன்று கதைகளும் தமிழ் மக்களின் அவலங்களை இரண்டு மணி நேரத்தில், முன்னுக்கும் பின்னுக்குமாக திரைக்கதை அமைத்து தமிழ் மக்களின் போராட்டக் களத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு செல்கின்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம். முழுக்கதையும், கதாபாத்திரங்களும், பாடல்களும், கதை வசனமும் ஈழத்தமிழில் உள்ளது. தமிழ், ஈழத்தமிழ் உணர்வு மிக்க படம் விரைவில் வெளியாகவுள்ளது
வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்பிரமனி, மிஷா கோஷல், லீமா ரணி, லீமா பாபு மற்றும் பேபி ரக்ஷனா மற்றும் பலர் நடித்த இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout