'யார் இந்த பேய்கள்': ஆயிரம் அர்த்தம் சொல்லும் கிருத்திகா உதயநிதியின் மியூசிக் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் 'யார் இந்த பேய்கள்’ என்ற மியூசிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆயிரம் அர்த்தங்கள் உள்ள அசத்தலான காட்சிகள் உள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் யுவன் சங்கர் ராஜா குரலில் உருவான ’யார் இந்த பேய்கள்’ என்ற மியூசிக் வீடியோ பாடலை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். செல்வந்தராக இருக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஏழையாக இருக்கும் பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அந்த குழந்தையின் மனதை பெற்றோர், சுற்றத்தார் புரிந்து கொண்டு சமூக விரோதிகள் என்ற பேய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அருமையான கான்செப்ட் கொண்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நம் குழந்தைகள் சொல்வதைக் கேட்டு அவர்களை பாதுகாப்போம் என்ற டைட்டிலுடன் முடிவடையும் இந்த மியூசிக் வீடியோவுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பா விஜய் இயற்றிய பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார் என்பதும் இந்த மியூசிக் வீடியோவுக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அருமையான கருத்து கொண்ட இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com