ராக்கெட்டரி - யானை - டிபிளாக்: இந்த வார ரிலீஸில் வசூலில் முதலிடம் பிடித்த படம் எது: 

  • IndiaGlitz, [Saturday,July 02 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருண் விஜய்யின் ’யானை’ மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ மற்றும் அருள்நிதியின் ’டி பிளாக்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களுக்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் வசூல் அளவில் ’யானை’ முதலிடத்தை பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

’யானை’ படம் பார்த்தவர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்து வரும் பதிவுகள் காரணமாக இந்த படத்திற்கு திரையரங்கில் கூட்டம் அதிகமாக குவிந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இந்தப் படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு கோடி ரூபாயும் உலக அளவில் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு இடங்களிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் முதல் மூன்று நாட்களில் இந்த 15 கோடி ரூபாய் வசூல் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடிய போதிலும் வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மாதவனின் ‘ராக்கெட்டரி’. இந்த படம் முதல்நாளில் 3.5 கோடி முதல் நான்கு கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் இன்றும் நாளையும் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எருமை சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டி பிளாக்’ திரைப்படம் வசூலில் மிக குறைந்த அளவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் முதல் நாளில் 40 லட்ச ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

தனுஷின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்: மாஸ் டைட்டில்!

தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

அறிமுக காட்சியே அதிரடி ஆக்சன் தான்: விஷால் வெளியிட்ட வீடியோ!

நடிகர் விஷால் நடித்து வரும் அடுத்த படத்தின் அறிமுக காட்சியே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என விஷால் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் வழியில் சிம்புவுக்கு கிடைத்த கிஃப்ட்!

நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சிகிச்சைக்கு முழு ஏற்பாடுகளை செய்த சிம்பு தற்போது

'நினைச்சா தோணும் இடமே': விக்கி-நயன் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

நடிகை நயன்தாராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நினைச்சா தோணும் இடமே' என்ற கேப்ஷனுடன் நயன்தாராவுடன் உள்ள ரொமான்ஸ் படங்களை

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய்: மீனாவின் திருமண நாள் பதிவு

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய் என மீனா கடந்த ஆண்டு திருமண நாளின்போது பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது