பீப் பாடலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரா
Send us your feedback to audioarticles@vaarta.com
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த சர்ச்சை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் அமைப்புகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் இந்த பாடலுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாடலுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து அவர்களை தூக்கில் போடவேண்டும் என பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, "அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கு சம்மந்தம் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.
குழந்தைகள் அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்டால் பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும்.
இப்படி ஒரு பாடலை மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே உருவாக்க இயலும். கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டும்' இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments