விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய தீபிகா படுகோனே
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொங்கல் தினத்தில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ', கலையரசனின் 'அதே கண்கள்', அருண்விஜய்யின் 'குற்றம் 23', கிருஷ்ணாவின் 'யாக்கை', நகைச்சுவை படமான 'எனக்கு வாய்த்த அடிமைகள்', விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் ஃபாஸ்ட் அன் ஃபியூரியஸ் புகழ் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த 'XXX: Return of Xander Cage' என்ற படமும் பொங்கல் ரேசில் தற்போது இணைந்துள்ளது. இந்த படம் தீபிகாவின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 14ஆம் தேதி இந்த படம் தமிழ் உள்பட பிரபல இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் உலக அளவில் இந்தியாவில்தான் முதன்முதலாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com