ஆபாச வீடியோ குறித்த விழிப்புணர்வு திரைப்படம்: ஹரி உதவியாளர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் சஜோசுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் 'X வீடியோ
இந்த படத்தின் டைட்டில் கிளுகிளுப்பாக இருந்தாலும் இந்த படம் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திரைப்படம் என்றும் குறிப்பாக இளம்பெண்கள், குடும்பத்தலைவிகளை இணையத்தின் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் படம் என்றும் இயக்குனர் சஜோ சுந்தர் கூறியுள்ளார்
இந்த படம் குறித்து இயக்குனர் சஜோசுந்தர் கூறியப்போது, 'நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே..? எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான்.. அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்..? விஷயம் இருக்கிறது.. நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்’கள் ஆபாச இணையதளங்களுடன் கூட்டணியில் இருப்பவை தான். அதனால் அந்த ஆப்ஸ்’களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணையதளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன. இதற்காக அந்த ஆபாச இணையதளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணையதளங்கள் கொடுக்கும் பணத்தில் தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை' என்று கூறியுள்ளார்.
ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும் தான் உண்டு.. இறப்பு என்பதே இல்லை.. அதனால் இந்த ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கிடைக்கும் வசூலில் ஒரு தொகையை அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட நன்கொடை தரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com