பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி
Send us your feedback to audioarticles@vaarta.com
மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டிகள் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடநது வரும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால் நேற்றைய போட்டி விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கவுர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 53 ரன்களும், நிடா டார் 52 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 134 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை. மிதாலி ராஜ் 56 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மந்தனா 26 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியால் இந்திய மகளிர் அணி இரண்டு வெற்றிகள் 4 புள்ளிகளுடன் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout