பார்வையாளர் இல்லாமல் நடத்தப்படும் WWE போட்டி: ரசிகர்கள் அதிருப்தி
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
அமெரிக்காவில் நடைபெறும் WWE என்ற மல்யுத்தப் போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்வார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அதிகம் செலவு செய்து டிக்கெட் வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் WWE போட்டியை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
WWE போட்டி மட்டுமன்றி WRESTLEMANIA என்ற போட்டியையும் பார்வையாளர் இல்லாமல் நடத்த போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தடையால் இந்த போட்டிகளை நேரில் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போட்டி நடத்தும் குழுவினர் கூறியபோது போட்டியை காண வரும் ரசிகர்களின் உடல்நலம் முக்கியம் என்பதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.