உலகமே அரண்டு கிடக்கும்போது உள்ளூரில் குத்தாட்டம்போடும் சீனா!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போது அதே வுஹான் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்டர் பூல் பார்டி ஒன்று நடந்திருக்கிறது. அந்த பார்டியில் எந்த சமூக இடைவெளியும் கடைபிடிக்கப் படவில்லை. யாரும் முகக்கவசமும் அணியவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் எந்தவொரு அக்கறையும் இல்லாமல் சொகுசாக நீச்சல் உடைகளுடன் பார்டியை கொண்டாடுகின்றது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வெகுவிரைவில் அப்பாதிப்பில் இருந்து சீனா வெளிவந்தது. அதையடுத்து மே மாதத்தின் தொடக்கத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. மக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பவும் செய்தனர். ஆனால் அதே மே மாதத்தில் ஒட்டுமொத்த உலக மக்களும் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் வுஹான் மாகாணத்தில் தலைக்காட்டத் தொடங்கியிருக்கிறது எனவும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது எனவும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த ஊரடங்கும் சிறிது காலத்திற்குத்தான். கடந்த மாதத்தில் இருந்து எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அந்நாட்டு மக்கள் சுதந்திரமாக வலம் வரும் காட்சிகளை செய்திகளில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில்தான் வுஹான் மாகாணத்தில் வாட்டர் பூல் பார்டி கொண்டாடப் பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி பார்டி ‘விருந்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். சமூக அக்கறை இல்லாமல் வுஹான் நகரத்து மக்கள் செய்யும் இந்த செயலுக்குத் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.