மாஸ் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் விஜய்: பிரபல எழுத்தாளர்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றி நடை போட்டு வரும் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு அனைத்து துறைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய ஒருசில படங்களுக்கு வசனம் எழுதியவருமான சுரேஷ்சுபா தற்போது மெர்சல்' படம் குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 'மெர்சல்' படத்தில் விஜய்யின் அபார நடிப்பு அவர் ஒரு மாஸ் நடிகர்    என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இப்படி ஒரு வலுவான காட்சிகள் அடங்கிய படத்தை உருவாக்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் அட்லிக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் நடிகையும் பெண் மோட்டார் சைக்கிள் வீரருமான அலிஷா அப்துல்லா தனது சமூக வலைத்தளத்தில் 'இப்படி ஒரு அட்டகாசமான கேரக்டரில் தளபதி தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும் வாய்ப்பு கிடைத்தால் தளபதியுடன் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். 'மெர்சல்' படத்திற்கு நாலாபக்கங்களில் இருந்து ஆதரவு குவிந்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

இவர்தான் உண்மையான 'மெர்சல்' டாக்டர்

சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி ஒரு டாக்டர் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும்

நெல்லை தீக்குளிப்பு மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் தீக்குளித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

'செம போதை ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' என நான்கு படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகரான அதர்வா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்

விஷாலின் அலுவலகத்தில் நேற்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால் உண்மையில் நேற்று சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

மெர்சலுக்கு எதிராக வழக்கு, போலீஸ் புகார்: இதற்கு ஒரு முடிவே இல்லையா!

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்த வசனங்களை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அந்த செய்தி படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.