'வாழை' திருடப்பட்ட கதையா? எழுத்தாளரின் குற்றச்சாட்டும் மாரி செல்வராஜின் பதிலும்..!.
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சோ தர்மன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன்.
என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......"என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்யூனிஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது.ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்று விட்டது.இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச்சிறுகதை என்னுடைய "நீர்ப்பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும். என்னை வாழை வாழ வைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
சோ தர்மனின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024
—
வாழைhttps://t.co/VRFo53NxFn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments