அசுரன் - வெந்து தணிந்தது காடு படங்களுக்குள் என்ன சம்பந்தம்? எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் ’அசுரன்’ படம் போன்று கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக் கதை மென்மையான நகர்ப்புறக் காதல் கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக் கதை தெரிவு செய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது. இவ்வாறு ஜெயமோகன் வெந்து தணிந்தது காடு படம் குறித்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com