மன ரீதியான துஷ்பிரயோகத்தை கடந்து வர எளிய சில வழிகள் எழுத்தாளர் ராக்கி கபூர் விளக்கம்.
- IndiaGlitz, [Thursday,April 04 2024]
கனவுகளுக்கு ஏது எல்லை என்ற சொல்லுக்கேற்ப,தனது திறமைகள் அனைத்தையும் காட்டி தற்போது,பொதுவுடைமையாளர்,பெண்ணியவாதி, எழுத்தாளர், ஆலோசகர் புத்தக வாசிப்பாளர் என இதுவரை மொத்தமாக 26 புத்தகங்களை எழுதி வெளியிட்டு ,2024 ஆம் ஆண்டிற்கான கோல்டன் புத்தக விருதை வாங்கிய டெர்பி ஜீன்ஸ் நிறுவனர் ராக்கி கபூர் அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
என் குழந்தைப் பருவத்தை பற்றி சொல்ல வேண்டுமானால்,மிகவும் வேடிக்கையான சந்தோஷமானக் காலம்.அப்பா அம்மா இருவரும் வித்தியாசமான மற்றும் முரண்பாடு உடையவர்கள்.ஆனால் அப்பா அதிகமாக பயணம் செய்வார்.அப்பா ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் இருவரும் மனதளவில் தூரம் .நான் யாரையும் பழி சொல்ல விரும்பவில்லை.இதுதான் எனது குழந்தைப் பருவமாக இருந்தது.
மேலும் உங்கள் குழந்தைப் பருவத்தில் என்னெல்லாம் பிரச்சினைகள் இருந்தது என்பதெல்லாம் விட்டுட்டு, நீங்கள் உங்கள் குழந்தைகளிடமே திரும்பவும் குழந்தை ஆகலாம்.இது எல்லோராலும் முடியும்.எனக்கு தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும்.தற்போது எனக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான்.எனது கணவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.எனக்கு பிடித்ததை செய்கிறேன்.பிடித்தது போல் இருக்கிறேன்.
எனது சிறு வயதில் நான் சில சீண்டல்களுக்கு ஆளானேன்.அதை எல்லாம் நான் சிரித்து கொண்டே என் அப்பாவிடம் சொல்வேன்.எப்போதும் என் அப்பா என்னுடன் இருக்க மாட்டார்.எதை செய்ய வேண்டாம் என சொல்கிறார்களோ அதை தான் செய்வேன்.எனவே இதற்காக அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.நிறைய தொந்தரவு கொடுப்பேன்.பள்ளியில் படிப்பை விட பாட்டு பாடுவது ,நடனம்,எழுதுவது ,வாசிப்பது போன்ற பழக்கங்கள் தான் அதிகம்.எனவே கலை மிகவும் அழகானது .இங்கு எல்லோருக்குமே திறமை இருக்கு .வெளிக்கொணர வேண்டும்.
சின்ன வயதில் என்னை நீச்சல் வகுப்பிற்கு அனுப்பி விட்டனர்.அப்போது அதை நான் சரியாக செய்யவில்லை.அப்போது என் அப்பா என்னிடம்,போ நீச்சல் செய் என சொல்லி விட்டார்.பல காலங்களுக்கு பிறகு தான் தெரிந்தது.அவர் கற்றுக் கொடுத்தது நீச்சல் மட்டுமல்ல.வாழ்க்கையில் நான் நீந்தப் போகும் பயணத்தை பற்றி கூறியுள்ளார்.
என் கணவரின் ஊக்கம் மற்றும் சப்போர்ட் எனக்கு அதிகமாக உள்ளது.நிறைய விஷயங்களை இருவரும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கிறோம்.என்னை எப்பவும் சிரிக்க வைத்த என் அப்பா ஒரு கட்டத்தில் என்னை விட்டு போய்விட்டார்.அந்த சமயத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன்.ரொம்ப கஷ்டப்பட்டு அதிலிருந்து வெளியில் வந்தேன்.அந்த சூழ்நிலைகள் மிகவும் கடினமாக இருந்தது.உண்மையில் நான் படித்தது மனோதத்துவம்.ஆனால் என்னாலேயே அந்த நிலையை அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியவில்லை.
உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களை ஒரு கட்டத்தில் மனம் புண்படும்படி அவமானப்படுத்துவதே இங்கு மனரீதியான துஷ்பிரயோகம் என நான் நினைக்கிறேன்.யாரோ ஒருவர் நம்மீது கல் வீசும்போது நாம் அதை கண்டுக் கொள்ளப் போவதில்லை.ஆனால் நாம் அன்பு வைத்த ஒருவர் நம்மிடம் இது போன்ற செயலில் நடந்து கொள்வது நிச்சயமாக துஷ்பிரயோகம் ஆகும்.என் வாழ்வில் நான் இதை அதிகம் கடந்து வந்துள்ளேன்.
சோஷியல் மீடியா என்பது என் வாழ்வில் முக்கியமான ஒன்று .அது எல்லோருக்குமே இப்போது நன்றாகவே பயன்படுகிறது.சோசியல் மீடியா செயலிகள் அனைத்தும் நமது தின வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கிறது.உங்களுக்கு என்ன தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த இந்த சோஷியல் மீடியா உதவுகிறது.
ஆண் செய்வதையே நானும் செய்வேன் எனக் கூறுவது நிச்சயமான பெண்ணியம் கிடையாது.உண்மையான பெண்ணியம் என்பது கம்பீரமான வெற்றியுடைய எண்ணங்களே ஆகும்.மேலும் சமத்துவம் என்பதே இங்கு யாருக்கும் புரியவில்லை.அதுதான் இங்கு உள்ள பெரிய உலகளாவியப் பிரச்சினை.ஒரு ஆணும் பெண்ணும் ஒரே நிலையில் இருப்பதில்லை இருக்கவும் முடியாது.
ஒரு பெண்ணிற்கு மாதா மாதம் மாதவிடாய் காலம் உள்ளது.அவர்களால் ஒரு குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.ஆனால் இது எதுவும் ஆணுக்கு இல்லை.எனவே இது இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள வேண்டும் என ராக்கி கபூர் கூறிய பல யதார்த்தமான மெய் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்