கலவி என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதை தனது ஆழ்ந்த கருத்தின் மூலம் விளக்கிய எழுத்தாளர் லதா .
Send us your feedback to audioarticles@vaarta.com
கழிவறை இருக்கை என்னும் புத்தகத்தின் மூலமாக பெண்கள் மத்தியில் பெரிய ஒரு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய எழுத்தாளர் லதா அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
கூறியதாவது,.
நம்ம சமுதாயத்தில் பொதுவாகவே திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பெண்ணோ ஆணோ உடலுறவு வைத்துக் கொள்வதில்லை.ஆனால் தற்போது முடிந்த அளவு அனைவரும் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.ஓரளவுக்கு யோசித்து பார்த்தால் திருமணம் என்பது உண்மையில் கலவிக்காக தானே.மேலும் திருமணத்திற்கு பிறகும் இணையர்களுக்குள் சரியான உடலுறவு இல்லாததால் என்னமோ வேறு ஒரு உடலை நாடுகிறார்கள்.
நான் நிறைய இதை பற்றி ஆராயும்போது சிலரை கேட்கும்போது, திருமணம் முடிந்து ஐந்து வருடத்தில் ஏதோ ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இல்லையெனில் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என தள்ளி இருப்பது என பல காரணங்கள் தெரிய வந்தது. மேலும் ஒரு ஆணுக்கு எந்த அளவுக்கு உடல் தேவை உள்ளதோ அதே அளவிற்கு பெண்ணிற்கும் உடல் தேவை இருக்கும் அல்லவா? இதில் என்ன தான் பிரச்சினை என தேடும்போது நிறைய ஆண்கள் பெண்களை சந்தித்து பேச ஆரம்பித்தேன்.
ஆண்களை கேட்டால்,அவர்களுக்கு பெரிதாக உடலுறவில் ஆர்வம் இல்லை என கூறுவர். பெண்களை கேட்டால்,அதில் எங்களுக்கு பெரிதாக திருப்தி கிடைக்கவில்லை என கூறுவர்.அது உண்மை தான் .எனக்கும் அதில் அனுபவம் இருக்கு. ஏனென்றால் ஒரு தீர்க்கமான தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.இங்கு யாருக்கும் எதுவும் சொல்லி கொடுப்பது இல்லை .கலவி என்பதை இப்போது வரையிலும் மூடி மறைத்து தான் வைத்து உள்ளோம். இதை பற்றி ஆண்களுக்கும் தெரிவதில்லை.
பெண்களுக்கும் தனக்கு என்ன தேவை என்பதும் தெரிவதில்லை. கணவன் மனைவி இருவரும் இதை பற்றி பேசுவதற்கும் பல மன தடைகள் உள்ளது. உடலுறவில் எனக்கு இது தான் தேவை என கேட்க ஒரு பெண்ணும் தயாராக இல்லை. நீ உண்மையில் சந்தோஷமாக இருக்கிறாயா என கேட்க ஒரு ஆணும் தயாராக இல்லை.
இதையெல்லாம் மொத்தமாக யோசித்து தான் கழிவறை இருக்கை என்னும் புத்தகத்தை எழுதினேன்.சிறு வயதில் இருந்தே டைரி எழுதும் பழக்கம் உள்ளது .அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி புத்தகமாக உருவெடுத்து உள்ளது. புத்தக வெளியீட்டிற்கு பிறகு உண்மையில் ஆண்களிடம் இருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது.ஆண்கள் என்னிடம் பேசும்போது, எங்களுக்கு யாரும் இதை பற்றி சொல்லி கொடுக்கவில்லை.இந்த புத்தகம் எங்களுக்கு பெரிய வழிகாட்டியாக உள்ளது என கூறினர்.
அந்த காலத்தில் இருந்தே , பெண்களுக்கு இது மட்டும் போதும்.அதை தாண்டி அவர்களுக்கு கலவி என்பது முக்கியம் இல்லை என்ற மூளைச்சலவை இந்த சமுதாயத்தில் பரவி கிடக்கிறது.திருமணத்திற்கு பிறகு , தாம்பத்தியத்திற்கு அனுப்பும் பெண்ணிடம் கூட,அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள் மற்றும் அவருக்கு என்ன தேவையோ அதை கொடு என்றே சொல்லி அனுப்புகின்றனர்.
ஆனால் இங்கு எந்த ஆணுக்காவது இப்படி சொல்லி அனுப்புவார்களா? கிடையாது ! கலவி என்பது நமக்கு தேவையான ஒன்று. ஆனால் அதை பற்றி பேச கூடாது அது நமக்கு தேவை இல்லை என நம்மளையே நம்ப வைத்துள்ளார்கள்.
உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற திணிப்பு இங்கு இருக்கிறது. இதனாலேயே பெண்கள் ஒரு வயதிற்கு பிறகு நாம் இதற்காக மட்டும் தானா என்று மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதையெல்லாம் மாற்ற முதலில் நாம் மாற வேண்டும் .நமக்கு என்ன தேவையோ அதை நாம் தான் பேச வேண்டும்.கட்டமைப்புகள் இருந்தாலுமே அதை எல்லாம் உடைத்தெறிந்து பெண்கள் பேச வேண்டும் வெளியில் வர வேண்டும்.என மிகவும் ஆழ்ந்த அழுத்தமான கருத்துகளை எழுத்தாளர் லதா பகிர்ந்தார்.இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments