இயக்குனர் விஜய் மீது குற்றச்சாட்டு: பதிவு செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் திடீர் நீக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

‘தலைவி’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து பதிவு செய்யப்பட்ட பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றினை அந்த படத்தில் பணிபுரிந்த எழுத்தாளர் அஜயன் பாலா திடீரென நீக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், தேவி, வனமகன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா. இவர் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ’தலைவி’படத்தின் கதை விவாதத்திலும் பணி புரிந்திருக்கிறார். இந்த நிலையில் அஜயன் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது:

சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும் ’தலைவி’படத்தின் படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரைச், சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்படக் காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன்.

இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் முதுகு குத்தல்தான். இத்தனைக்கும் முந்தைய நாள் கூட பேசினேன். அப்போது கூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்குக் கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார்போல.

இப்படி எழுதியதால் எனக்கு முறையாகச் சேர வேண்டிய சம்பளப் பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை’ என பதிவு செய்துள்ள எழுத்தாளர் அஜயன் பாலா பின்னர் திடீரென பதிவு போட்ட சிலமணிநேரத்தில் அந்த பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்தியன் 2' விபத்து: லைகாவுக்கு கமல் எழுதிய கடிதம்!

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

'தளபதி 65' இயக்குனர் யார்? திடீர் திருப்பம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும்

ட்ரம்புடனான விருந்தை புறக்கணித்தாரா??? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இரண்டு நாள் அரசு சுற்று பயணம், அமெரிக்கா மற்றும் இந்தியர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாதவனின் அடுத்த படத்தில் சர்வதேச பிரபலம்!

நீண்ட இடைவேளைக்குப்பின் மாதவன் தமிழில் நடித்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது.

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு ஆணையம் அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினி கூறிய கருத்து ஒன்றுக்காக அவரிடம் விசாரணை நடத்த, இந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது