இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வருபவர் விருத்திமான் சஹா. இவருக்கு ஐபிஎல் தொடர் போட்டியின்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சஹா கொரோனாவில் இருந்து மீண்டார். தற்போது தனிமையில் இருக்கும்போதே மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் 2021 போட்டி கொரோனா பரவல் காரணமாக இடையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதுவும் அணியில் விளையாடி வந்த சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிசிசிஐ உடனடியாக போட்டியை ஒத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் அமித்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
அதோடு பெரும் அதிர்ச்சியாக ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னர் விவேக் யாதவ் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட விருத்திமான் சஹாவுக்கு தனிமையில் இருக்கும்போதே மீண்டும் அறிகுறியின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசிஐ டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சஹா இடம்பெற்று உள்ளார். இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் வரும் ஜுன் 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளனர். இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் மேலும் 5 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் சஹாவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் அனுமதிக்கப்படுவார் எனக் கருத்துக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments