கொரோனாவால் உலகம் முழுவதும் பசி, பட்டிணி இரட்டிப்பாகும்!!! ஐ.நா. சபை எச்சரிக்கை!!!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

 

“கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பசி, பட்டிணியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்” என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இதனால் 265 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் பசி, பட்டிணியை எதிர்க்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என ஐ.நா. சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு நேற்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஐ.நா சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு (WFP) கொரோனா பாதிப்பினால் உலகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறித்து தற்போது புதிய கணக்கீடுகளை வெளியிட்டு உள்ளது. அதில், 2020 ஆம் ஆண்டில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக உலக மக்கள் தொகையில் 265 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பசியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 130 மில்லியனாக இருந்தது எனவும் அந்த எண்ணிக்கையோடு தற்போது 135 மில்லியன் அதிகரித்து இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

உலக உணவுத்திட்ட அமைப்பு (WFP) கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே, கடந்த நான்கு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பசி, பட்டடிணி கொடுமைகள் அதிகரித்து இருப்பதாக எச்சரித்திருந்தது. கடந்த ஆண்டு மட்டுமே 55 உலக நாடுகளில் 135 மில்லியன் மக்கள், கடுமையான உணவு நெருக்கடி மற்றும் மனிதாபிமானமற்ற அவசரக்கதியில் வாழ்ந்து வந்ததாகவும் இந்த அமைப்பு தெரிவித்து இருந்தது. கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்து உலக உணவுத்திட்ட அமைப்பு (WFP), ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. உலக நாடுகளுக்கிடையிலான மோதல்கள், வர்த்தகப் போராட்டம், வறட்சி, வானிலைத் தொடர்பான நிகழ்வுகளால் இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், மன அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ளும்போது உலகம் முழுவதும் மேலும் 183 மில்லியன் மக்கள், உணவு நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கை தகவல் கூறுகிறது.

கொரோனா நேரத்தில் இந்த பாதிப்பு எண்ணிகை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. வயதானவர்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு முடங்கியிருக்கிறார்கள். பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலைமையால் கடந்த நான்கு ஆண்டுகளில் இருந்த பாதிப்பை விட தற்போது உலகம் பேரழிவை சந்திக்க வேண்டிவரும் எனவும் WFP வின் பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹுசைன் கருத்துக் கூறியிருக்கிறார்.

More News

ஊரடங்கு நேரத்திலும் திகிலூட்டும் தங்கத்தின் விலை!!! ஏன் இந்த நிலைமை???

கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. யாரும் கடைகளில் தங்கத்தை விற்கவுமில்லை.

கொரோனாவைத் தடுக்கும் புரதம்: முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்!!!

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் வேகமாகப் பணியாற்றி வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தளபதி விஜய் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோலிவுட்டின் பல பிரபல நடிகர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் மாஸ் நடிகரான தளபதி விஜய்யிடம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி: தமிழகம் சாதனை

கொரோனா வைரஸை ஒழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள்

காவல்துறைக்கு 3 வேளை உணவு, தங்குவதற்கு 8 ஓட்டல்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு அரசும் தனியார் அமைப்புகளும், திரையுலக பிரபலங்களும்