கொரோனா நிவாரண நிதி வழங்கிய உலகப் பணக்காரர்கள்: மூன்றாவது இடத்தில் இந்திய தொழிலதிபர்!!!
- IndiaGlitz, [Thursday,May 14 2020]
கொரோனா வைரஸ் உலகம் முழுவம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே சில மாதங்கள் ஊரடங்கில் முடங்கியிருந்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையை அரசுகள் சந்தித்தன. இந்த நிலைமையை எதிர்க்கொள்வதற்காக தற்போது உலகப் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கொரோனா நன்கொடை நிதியை அறிவித்து வருகின்றனர். அதில் வியப்பூட்டும் சிலரது நிதித் தொகையை ஃபோர்ப்ஸ் ஊடகம் தொகுத்து வெளியிட்டுள்ளது.
மேலும் ஃபோர்ப்ஸ் தொகுத்துள்ள பட்டியலின் படி ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை 77 பில்லியன் டாலர் தொகை, நிவாரண நிதியாக உலகின் பல நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதில் ட்விட்ர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். டோரிசி தனது ஒட்டுமொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரரும் மெலிண்டா அறக்கட்டளையின் நிர்வாகியுமான பில் கேட்ஸ் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு, நிவாரணம் எனப் பல காரணங்களுக்காக 255 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். மூன்றாவது பெரிய நன்கொடை ஒரு இந்திய தொழில் அதிபரிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அசிம் பிரேம்ஜி கொரோனா நிவாரண நிதியாக 132 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக ரூ. 25 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப் பணக்காரங்களின் பட்டியலில் இடம்பிடித்த பெரும் இந்திய தொழில் நிறுவனங்களே நன்கொடை பற்றி எந்த செய்தியையும் அறிவிக்காத நிலையில் அசிம் பிரேம்ஜி மிகப் பெரியத் தொகையை வழங்கியிருக்கிறார்.
நான்காவது இடத்தில் அமெரிக்க பணக்காரரான ஜார்ஜ் சொரேஸ் 130 மில்லியன் டாலர்களை கொரோனா நன்கொடையாக அறிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் 10 கொரோனா நிவாரண நிதி வழங்கியவர்களின் பட்டியலில் அதிகம் அமெரிக்கர்களே இடம் பிடித்துள்ளனர். அடுத்ததாக அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் 5 ஆவது இடத்தில் 100 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆஸ்தரேலிய தொழிலதிபர் ஆண்ட்ரூ ஃபாரெஸ் கொரோனா நன்கொடையாக 100 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல் நிறுவனத்தின் நிர்வாகி மைக்கேல் டெல் இந்திய மதிப்பில் ரூ. 758.48 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். ப்ளூம்பெர்க் எல்.பி நிறுவனத்தின் நிர்வாகி மைக்கேல் ப்ளூம்பெர்க் ரூ.565.05 கோடியும், சான்ஸன் எனெர்ஜி நிறுவனத்தின் சார்பாக ரூ. 565.05 கோடி ரூபாயும் வழங்கப் பட்டுள்ளது.