கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் சினிமா பிரபலங்கள்!!!
- IndiaGlitz, [Monday,April 27 2020]
கொரோனா வைரஸ் தொற்றால் பல முக்கியத் திரைப்படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.
1.ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவருடைய மனைவியும் பாடகியுமான ரீட்டா வில்சனுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
2. பிரெஞ்சு நடிகை ஓல்கா குரரென்கோ மார்ச் 15 ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
3. பிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா மார்ச் 16 ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டார். ஆனால் இதுவரை அவருக்கு பாதிப்புகள் எதுவுமில்லாமல் தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. கேம் ஆப் த்ரோன் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் ஹிப்ஜு க்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக மார்ச் 17 அன்று செய்திகள் வெளியாகின. அவருக்கு வயது 41 என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. Entourage and Goodfellas இல் நடித்த டெபி மசார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நீண்டநாட்களாக தனிமையில் இருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவத்தைப் பற்றி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
6. அமெரிக்க நடிகர் மற்றும் Hawaii Five-0 தொலைக்காட்சித் தொடர் மூலமாக பிரபலமான டேனியல் டே கிம் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
7. ஸ்பானிஷ் ஓபரா பாடகர் பிளாசிடோ டொமிங்கோ வுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதால் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
8. அமெரிக்கா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றம் எழுத்தாளரான ஆண்டி கோஹன் மார்ச் 20 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள்வெளியாகியது.
9, பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் செய்தி தொகுப்பாளரான கிறிஸ் கியூமோ வுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக மார்ச் 31 அன்று செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து அவர் வீட்டிலிருந்து பணியாற்றுவார் என அச்செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
10. அமெரிக்க பாடகி அலெசியா பெத் மூர் தானும் தனது மூன்று வயது மகனும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். தற்போது அவர்கள் குணமடைந்து இருப்பதாகவும் கொரோனா நிவாரண நிதியாக ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுக்க உள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
11. சிஎன்என் செய்தி தொகுப்பாளரான கிறிஸ் கியூமோ வுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக மார்ச் 31 அன்று செய்திகள் வெளியாகியது. அவருடன் பணிபுரியும் மற்றொரு நபரான ப்ரூக் பால்ட்வினுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்திருக்கிறது.