தங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்? அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்திலேயே விலையுயர்ந்த ஐஸ் க்ரீமை துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்று தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த ஐஸ் க்ரீமை சாப்பிடும் வாடிக்கையாளர்கள் அதன் தோற்றத்தைப் பார்த்தே மலைத்துப்போய் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறன்றனர்.
காரணம் அந்த ஐஸ் க்ரீமில் 23 காரட் மதிப்புள்ள தங்க இழைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. கூடவே அதில் சாப்ரான் மற்றும் விலையுயர்ந்த பிளாக் ட்ரூபிள் போன்றவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஐஸ் க்ரீமின் ஒன்று அமெரிக்க டாலரில் 840 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இந்திய மதிப்பில் ரூ.60,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் உள்ள “ஸ்கூப்பி கபே“ எனும் நிறுவனம்தான் இத்தனை விலையுயர்ந்த ஐஸ் க்ரீமை விற்று வருகிறது. “பிளாக் டைமண்ட்” எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஐஸ் க்ரீமை ஒரு வெர்சேஸ் வகை விலையுயர்ந்த பவுலில் வைத்து கூடவே வெள்ளி ஸ்பூன் வைத்து தருகிறார்கள். இதனால் ஐஸ் க்ரீம் பார்ப்பதற்கே படு அசத்தலாக இருக்கிறது.
இத்தனை விலையுயர்ந்த ஐஸ் க்ரீமை சாப்பிட்டு அதன் புகைப்படங்களை நடிகையும் டிராவலர் விலாகருமான ஸுனாஸ் டிரஸரிவாலா என்பவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இதனால் சோஷியல் மீடியாவில் விலையுயர்ந்த ஐஸ் க்ரீம் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout