கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு நிதித்திரட்டும் உலகின் மெகா கூட்டணி!!! தவிர்த்த அமெரிக்கா, ரஷ்யா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் உலக நாடுகளை ஒருங்கிணைந்து உலகளாவிய கூட்டணி ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், United Kingdom, நார்வே மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா சிகிச்சைக்கான ஆராய்ச்சிக்கு இந்தக் கூட்டணியால் 8 பில்லியன் டாலர் (800 கோடி) திரட்டித் தரப்படும் என முன்னதாக உறுதியளிக்கப்பட்டு இருந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கூட்டத்தில் 40 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஊர்சுலா ஃபான் டேர் லெயன் “தற்போது திரட்டப்பட்டு இருக்கிற தொகையைவிட கூடதலான தொகை தேவைப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார். இதுவரை 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கூட்டணி அமைப்புக்கு நிதியை அளித்திருக்கின்றன. மேலும், இந்த நிதித்திரட்டல் பணியில் ஐ.நா. சபை மற்றும் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பங்களிப்பு சிறப்பானது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா விஷயத்தில் உலக வங்கி தவறிழைத்து விட்டது என்று WHO விற்கு வழங்கிவரும் நிதியையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் இந்தக் கூட்டத்திலும் அமெரிக்கா கலந்து கொள்வதை தவிர்த்து இருக்கிறது. ஜப்பான், கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சீனாவின் சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனத் தூதர் மட்டுமே கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாப் பாடகர் மடோனா ஒரு மில்லியன் யூரோக்களை (1.08 மில்லியன் டாலர்களை) இந்த அமைப்புக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் “கொரோனா தடுப்பூசி தற்போது மிகவும் அவசியம்” என்று வலியுறுத்தி பேசினார். இதில் கலந்து கொண்ட பல நாட்டுத் தலைவர்களும் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “தடுப்பூசி பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்லாது எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் “கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப் படும் குழுக்களுக்கு ஊதியம் வழங்கப்படும், அவர்கள் கொரோனா நேரத்தில் பேட்டன் போன்ற விஷயங்களை தள்ளிவைக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும், மலிவான விலைக்கு அனைத்து உலக நாடுகளுக்கும் கிடைக்குமாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டணி அமைப்பின் ஆராய்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 1 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. நார்வேயும் இதே அளவிலான தொகையை வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் 500 மில்லியன் யூரோக்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளும் இதே அளவிலான தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. கொரோனா திடுப்பூசி ஆராயச்சியை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டு இருக்கும் இந்தக் கூட்டணி அமைப்புக்கு ஐ.நா. சபை பக்கபலமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments