ஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்??
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் ஆப்பிரிக்காவை தவிர சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே யானைகள் வாழுகின்றன. இந்நிலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு 1 வயது குட்டி யானையாக இருக்கும்போது கவன் எனும் பெயர் கொண்ட ஆண் யானை ஒன்று இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டு அங்குள்ள பூங்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 35 ஆண்டு காலமாக கவன் யானை கொடுமையான தனிமையில் தவித்து வந்ததாக பல சர்வதேச அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
மேலும் தனிமையின் காரணமாக கவன் சுவற்றில் அடித்துக் கொண்டு தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதும், கத்துவதும் பார்ப்போரை கண்கலங்க வைத்ததாகச் செய்திகள் வெளியாகியது. இத்தகவலை அமெரிக்கப் பாடகியான சீர், ஃபார் பாஸ் இண்டர்நேஷனல் மற்றும் பல சர்வதேச விலங்குகள் நல அமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அவரது முயற்சியால் இன்று கவன் யானை 35 ஆண்டுகால தனிமையை முடித்துக் கொண்டு விமானம் மூலம் கம்போடியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் எனும் உயிரியியல் பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த கவன் யானை தொடர்ந்து பல ஆண்டுகளாக தனிமையிலேயே வாழ்ந்து வந்திருக்கிறது. தனிமையைப் போக்குவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு சாஹெலி எனும் பெண் யானை அந்த பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் யானையும் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் யானை உயிரிழந்து 8 வருடங்கள் ஆன நிலையில் கவன் கொடுமையான தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச விலங்குகள் நல அமைப்பு மற்றும் ஃபார் பாஸ் இண்டர்நேஷனல் விலங்குகள் நல அமைப்பு இரண்டும் இணைந்து கவன் யானையை கம்போடியாவிற்கு கொண்டு செல்ல கடுமையாக போராட்டத்தை நடத்தின. பல ஆண்டுகள் கழித்து மாகாசல் உயிரியியல் பூங்கா மூடப்படுவதை ஒட்டி பாகிஸ்தான் அரசாங்கமும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 6 மாத கூண்டு பயிற்சிக்குப் பின்னர் கவன் விமானத்தின் கூண்டுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு கம்போடியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. கம்போடியாவில் அதிகமான யானைகள் இருக்கும் என்பதால் கவனுக்கு புதிய வாழ்க்கை கிடைக்க இருப்பதாகப் பல விலங்குகள் நல அமைப்பினர் மகிழ்ச்சித் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments